இந்தியாவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் போதாது: சோனியா காந்தி

டெல்லி: இந்தியாவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் போதாது என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி தலைமையில் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. அரசியல் சூழ்நிலை, மழைக்கால கூட்டத்தொடர், பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஆலோசனையின் போது பேசிய சோனியா காந்தி, மூன்றாவது அலைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானது எனவும் குறிப்பிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories:

>