புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்திற்கு வந்த காவிரிநீருக்கு பெண்கள் கும்மியடித்து, மலர்தூவி வரவேற்பு-முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்திற்கு வந்த காவிரிநீரை பெண்கள் கும்மியடித்து மலர்தூவி வரவேற்றனர். உரிய நேரத்தில் மேட்டூர் தண்ணீரை திறந்து வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.மேட்டூரில்,ஜூன் 12ம் தேதி காவிரி தண்ணீரை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார் . பின்னர் கடந்த 16ம் தேதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தலைமையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் வரும் வழி எங்கும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்று வணங்கி வருகின்றனர். இந்நிலையில் நீர், தஞ்சை மாவட்டத்திற்குள் நுழைந்து கடைமடைப் பாசனப்பகுதிகளுக்கு நேற்று முதல் வரத் தொடங்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகா தொடங்கி ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகா வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வரை நேரடியாகவும், ஏரிகள் மூலமும் பாசத்திற்கு வரவேண்டிய காவிரி தண்ணீர் நேற்று முதல் வந்து கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்திற்குள் நேற்று வந்தடைந்தது. காவிரி தண்ணீர் வந்துவிட்டதை அறிந்த மேற்பனைக்காடு விவசாயிகள் பூவை கொட்டி வரவேற்றனர். பெண்கள் கும்மி அடித்து குலவை சத்தம் போட்டு வணங்கி வரவேற்றனர். மேலும் விவசாயிகளும் தண்ணீர் வந்ததை பார்த்து வரவேற்று மகிழ்ச்சியடைந்தனர். உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விவசாயத்தை காத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: