ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு பள்ளி வளாகத்தில் ஓர் அடர்வனம்!: காய்கறி தோட்டம், மூலிகை பண்ணை என அசத்தும் ஆசிரியர்கள்..!!

ஈரோடு: ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி வளாகத்தில் ஏராளமான மரங்கள், செடிகள் கொடிகளை பராமரித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர். அள்ளிக்குளம், காய்கறி தோட்டம், மூலிகை பண்ணை, அழகிய பூஞ்சோலை என்று பள்ளி வளாகமே அடர் வனமாக காட்சியளிக்கிறது. 

பள்ளி எப்போது திறக்கப்பட்டாலும் மாணவர்களை வரவேற்க துளியும் பசுமை மாறாமல் காத்திருக்கிறது பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் பசுஞ்சோலை. ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரின் மையத்தில் இருக்கிறது அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி . வாகன போக்குவரத்து மிகுந்த பிராதான சாலையை கடந்து பள்ளிக்குள் நுழைந்தாலே அடர்ந்த வனத்துக்குள் நுழைந்த பிரம்மிப்பை தருகிறது பள்ளி வளாகம். 

10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 200 மரங்கள் மட்டுமே இருந்த பள்ளி வளாகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் ஓங்கி வளர்ந்து உயர்ந்து நிற்கின்றன. விருப்பமுள்ள சக ஆசிரியர்களையும் சேர்த்து குழுக்கள் அமைந்து சுயற்சி முறையில் பள்ளி வளாகத்தில் உள்ள வனப்பகுதியை பராமரிக்கும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், களைப் பறித்தல், கவாத்து செய்தல் என்று தொடர்கிறது அவர்களின் களப்பணி. வேளாண்மை ஆசிரியர் கந்தன் மற்றும் சக ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் செம்மையான உழைப்பால் பள்ளியின் இயற்கை சூழல் உயிர்ப்புடன் இருக்கிறது. 

பெருந்துறை அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடர்வனத்தில் அள்ளிக்குளம், காய்கறி தோட்டம், மூலிகை பண்ணை, தெய்வீக மரங்கள், அழகிய பூஞ்சோலை, உயிர்வல்லி சோலை, மியாவாகி அடர்வனம் என்று ஒரு பெறுவனத்தின் அத்தனை அம்சங்களும் உள்ளன. பள்ளி கட்டிடமும், மைதானமும் போக எஞ்சிய எட்டரை ஏக்கரில் சோலைவனமாக பள்ளி வளாகம் காட்சி தருகிறது. 

Related Stories: