கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி அர்ஜென்டினா முதல் வெற்றி

ரியோ டி ஜெனீரோ: 47வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும்  முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடந்த போட்டியில், பி பிரிவில் சிலி-பொலிவியா அணிகள் மோதின. இதில் சிலி அணி தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில், பென் ப்ரெட்டன் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.

பின்னர் கடைசிவரை போராடியும் பொலிவியாவால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் சிலிவெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஆடிய இந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும். முதல் போட்டியில் அர்ஜென்டினாவுடன் டிரா கண்டிருந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில், அர்ஜென்டினா -உருகுவே அணிகள் மோதின.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் 10வது நிமிடத்தில், அர்ஜென்டினா அணியின் ரோட்ரிக்ஸ் கோல் அடித்தார். பின்னர் கோல்  எதுவும் விழாததால் இதுவே வெற்றிகோலாக அமைந்தது. 1-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடிய அர்ஜென்டினாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

Related Stories:

>