ராகுல் காந்தி பிறந்த நாள் தமிழ்நாடு மருத்துவ இயக்ககத்துக்கு கொரோனா உபகரணங்கள்: கே.எஸ்.அழகிரி இன்று வழங்குகிறார்

சென்னை:  கொரோனா காரணமாக ராகுல்காந்தி தனது பிறந்த நாளை காங்கிரசார் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  அதன்படி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் சார்பில் 100 பேருக்கு நிவாரண உணவு பொருட்கள் தொகுப்பை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்குகிறார்.  காங்கிரஸ் மருத்துவ அணி சார்பில் 100 பேருக்கு கொரோனா உயிர்காக்கும் மருந்து தொகுப்பு வழங்கப்படுகிறது.  தொடர்ந்து, ஆக்சிஜன் செறிவூட்டிகள், டிஜிட்டல் தெர்மாமீட்டர், ஆக்சி மீட்டர், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரண தொகுப்பை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு மருத்துவ இயக்ககத்தினரிடம் கே.எஸ்.அழகிரி ஒப்படைக்கிறார்.

Related Stories:

>