ரூ.1,064 கோடி கடன் மோசடி விவகாரம்: தெலுங்கானா எம்பிக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க ரஞ்சி எக்ஸ்பிரஸ் வே லிமிடெட் எனும் நிறுவனம் டெண்டர் எடுத்தது. இந்நிறுவனம் சார்பில் இதன் இயக்குநர்களான கே.ச.ஸ்ரீநிவாச ராவ், என்.சீதைய்யா மற்றும் நாமா பிரித்வி தேஜா ஆகியோருக்கு கனரா வங்கி சார்பில் 15 வங்கிகள் கூட்டாக சேர்ந்து கடனாக ரூ.1,191 கோடி வழங்க இருந்தது. இதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் பின்வாங்கியதால், அந்தத் தொகை ரூ.1,151 கோடியாக குறைந்தது. இதற்கு நாமா பிரித்வி தேஜாவின் தந்தையும், தெலங்கானா மாநிலத்தின் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சியின் எம்.பி.யுமான நாமா நாகேஸ்வர ராவ் 2011-ம் ஆண்டில் ஜாமீன் வழங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான மதுகான் புராஜக்ட் நிறுவனத்திற்கு ரூ.50 கோடியை ரஞ்சி எக்ஸ்பிரஸ் வே லிமிடெட் ஒதுக்கியது. இது வங்கியை ஏமாற்றும் செயல் என்று அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ விசாரணையை தொடங்கின.

இந்த வழக்கு தொடர்பாக வரும் 25-ம் தேதி நாமா நாகேஸ்வர ராவ் உட்பட ரஞ்சி எக்ஸ்பிரஸ் வே லிமிடெட் நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களும் ஹைதராபாத் அமலாக்கப்பரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கியிலிருந்து கடன் பெற்றும் இதுவரையில் இந்நிறுவனம் நான்கு வழிச்சாலை அமைக்க எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>