அரசு மருத்துவமனைகளில் மற்ற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில், கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் அந்த நோய்களுக்கான சிகிச்சை பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்படாத பிற நோயாளிகளின் அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலை நீடித்தால் கொரோனா தொற்று அல்லாதோரின் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கொரோனா தொற்று இல்லாத பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.எனவே, தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>