லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 3 பேர் கைது

சின்னசேலம் : கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலையடிவாரத்தில் காரில் கள்ளச்சாராயம் கடத்துவதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கோமுகி அணை வளாக பகுதியில் மதுவிலக்கு சம்பந்தமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன்மலையடிவாரத்தில் இருந்து அதிவேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். மேலும் காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கல்பொடை கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் ராமர்(47), கல்பொடையை சேர்ந்த பார்த்திபன்(30), தாழ்மதூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா(31) என்பது தெரிந்தது. பின்னர் காரில் சோதனை நடத்தியபோது 7 லாரி டியூப்களில் 150 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், அவர்களை  3 பேரை கைது செய்ததுடன் கார் மற்றும் லாரி டியூப்பில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதைப்போல கல்வராயன்மலையில் அரண்மனை புதூர் கிராம ஓடையில் கரியாலூர் போலீசார் நடத்திய சாராய ரெய்டில் குபேந்திரன் என்பவர் சாராயம் காய்ச்ச 5 பேரல்களில் வைத்திருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.

Related Stories:

>