முக்கிய செய்தி உலகம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.10 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம் Jun 13, 2021 இந்தியா ஓலம் ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.03 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.63 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 176,387,512 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 160,347,533 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 10 ஆயிரத்து 206 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 12,229,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 85,074 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான் உதாரணமாக இருப்பேன் : தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்
கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா?.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்
இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு; வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை: முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: மொத்தம்- 1,749; நிராகரிப்பு -664; ஏற்பு-1085.! நாளை இறுதி பட்டியல் வெளியீடு
கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்
சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்
நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம்… பாஜக தலைவர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!!
DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி : உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: மனுக்களை வாபஸ் வாங்க இரண்டு நாட்கள் கெடு
“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி”.. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் ; 10,92,420 வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பு!!