இந்தியா டெல்லி துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!: 20 கடைகள் எரிந்து நாசம்...உரிமையாளர்கள் வேதனை..!! Jun 12, 2021 டெல்லி: டெல்லியில் துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் மொத்தம் 20 கடைகள் எரிந்து நாசமடைந்தன. கொரோனா 2ம் அலை காரணமாக டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இதனால் டெல்லியில் உள்ள அனைத்து கடைகளும் சில விதிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஒன்றரை மாத காலம் மூடப்பட்டிருந்த லாஜ்பாத் நகரில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் இங்குள்ள துணி கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே புகை மூட்டத்தால் சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 30 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் துணிக்கடையில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவி பெரும் பொருள் இழப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் 20 கடைகள் எரிந்து நாசமடைந்தன. இதனால் கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்த கடை உரிமையாளர்கள் வேதனைக்கு ஆடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாலியல் புகாரில் வெளிநாட்டிற்கு ஓட்டம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்: சிபிஐ மூலம் நடவடிக்கை
மீண்டும் சர்ச்சை கிளப்பும் நேபாளம்; இந்திய பகுதிகளுடன் கூடிய வரைபடத்துடன் புதிய கரன்சி: வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பாலியல் வழக்கில் சிக்கியதால் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கு கர்நாடக போலீஸ் கடிதம்
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தகவல்
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
ஆபாச வீடியோ விவகாரம் : பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ்