டுவிட்டரை தடை செய்த நிலையில் இந்திய ‘கூ’ செயலிக்கு நைஜீரிய அரசு அங்கீகாரம்

புதுடெல்லி: நைஜீரிய அரசு டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் ‘கூ’ செயலியை தொடங்கியுள்ளது.  கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக நைஜீரிய அதிபர் முகமது புஹாரி டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதனை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. அதனால், டுவிட்டர் பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாகக் கூறி நைஜீரியாவில் டுவிட்டர் பயன்பாடுகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதையடுத்து பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘கூ’ செயலியின் பயன்பாட்டை, நைஜீரியா அரசு அங்கீகரித்துள்ளது.

இதுகுறித்து ‘கூ’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறுகையில், ‘இந்தியாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் ‘கூ’ செயலின் பன்பாட்டு சிறகை விரித்துள்ளோம். நைஜீரியா அரசு ‘கூ’ செயலியில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது. தொடர்ந்து நைஜீரிய உள்நாட்டு மொழியிலும் ‘கூ’ செயலியின் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குவதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பல மொழிகளிலும் ‘கூ’ செயலியை பயன்படுத்துவற்கான அதிக வசதிகளை ஏற்படுத்த தயாராக உள்ளோம். மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தங்களில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி உள்ளோம்’ என்றார்.

Related Stories: