புதுடெல்லி: உலக அளவில் உயா்கல்வி குறித்து ‘குவாக்கரெலி சைமண்ட்ஸ்’ (க்யூஎஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது 18வது சா்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில்படி, மும்பை ஐஐடி 177வது இடத்தையும், டெல்லி ஐஐடி 185வது இடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி 186வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆராய்ச்சி பிரிவில், உலக அளவில் முதலாவது இடத்தில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி) உள்ளது.