செந்துறை அருகே நெடுஞ்சாலையில் மூலிகை மரங்களுக்கு தீ வைப்பு-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரியலூர் : செந்துறை அருகே நெடுஞ்சாலையில் மூலிகை மரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீத நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அரியலூரில் இருந்து செந்துறை வழியாக ஜெயங்கொண்டம் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் நெடுஞ்சாலை துறையினரால் புங்கன், நாவல், வேம்பு, மருதம் மற்றும் பழமை வாய்ந்த மூலிகை மரங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தற்போது மரங்கள் நன்கு வளர்ந்து அப்பகுதியில் சாலை இருபுறங்களிலும் நிழல் தந்து பயணிகள் இலைப்பாறவும் வசதியாக உள்ளது. இந்தநிலையில் பொய்யாதநல்லூர் - இராயம்புரம் இடையே பத்திற்கும் மேற்பட்ட மரங்களை சில சமூக விரோதிகள் தீ வைத்து எரித்துள்ளனர், இதில் மருதம், புங்கை,  வேம்பு மற்றும் பாதாம் போன்ற மரங்கள் தீயில் எரிந்து கருகின. தற்போது, சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காக இளைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இயற்கை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டும், மரங்களை பாதுகாக்க போராடி வருகிறானர். இது போன்று சில சமூக விரோதிகளால் இயற்கை அழிந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் இயற்கையை பாதுகாக்க இது போன்று சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயற்கையை பாதுகாக்க புதிய சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்

என அப்பகுதி இளைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Stories: