அமேசான், சிஎன்என் உட்பட பல இணையங்கள் முடங்கின

வாஷிங்டன்: இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம், தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், பினான்சியல் டைம்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவன இணையதளங்கள், அமேசான் வெப் சேவை இணையதளம் ஆகியவை நேற்று மாலை திடீரென ஒரே நேரத்தில் முடங்கின. இதனால், இது சைபர் தாக்குதலா என சந்தேகம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு இணையதளங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இந்த குழப்ப த்திற்கு காரணம், பாஸ்ட்லி எனும் அமெரிக்க நிறுவனத்தின் சர்வரில் ஏற்பட்ட பாதிப்பே என்பது விசாரணையில் தெரிந்தது. இந்நிறுவனம், மேற்கூறிய இணையதளங்களின் சர்வர்களை நிர்வகிக்கிறது. பாஸ்ட்லி சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளங்கள் ஒரே நேரத்தில் முடங்கி உள்ளன.

Related Stories: