3.22 கோடி மோசடி வழக்கு மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை: தென்னாப்பிரிக்கா நீதிமன்றம் உத்தரவு

டர்பன்: மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தியின் மகள் இலா காந்தி. இவருடைய மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின் (56). இவர்  தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இந்த நாட்டிலேயே வசிக்கிறார். கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட்டில்  நியூ ஆப்ரிக்கா அலைன்ஸ்  புட்வேர் என்ற நிறுவனத்தின் தலைவரான மகாராஜ் என்பவரை லதா சந்தித்துள்ளார். ‘நெட்கேர் என்ற மருத்துவமனை நிர்வாகத்துக்கு 3 கன்டெய்னர் சணல் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஆர்டர் கிடைத்து உள்ளது. அதற்கான இறக்குமதி, சுங்கவரியை செலுத்த என்னிடம் பணம் இல்லை. நீங்கள் நிதியுதவி செய்தால் திருப்பி கொடுத்து விடுகிறேன்,’ என கேட்டுள்ளார். கடனுக்கு ஈடாக லாபத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் உறுதி அளித்துள்ளார். இதனை நம்பிய மகாராஜ் ரூ.3.22 கோடி கொடுத்து உதவியுள்ளார். ஆனால்,  நாட்கள் கடந்த நிலையில், அந்த பணம் மகாராஜாவின் நிறுவனத்திடம் இருந்து வாங்கவில்லை என லதா கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும்  காட்டியுள்ளார்.

ஆனால், அவை அனைத்தும் போலி ஆவணங்கள் என மகாராஜூக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 2015ம் ஆண்டு லதா மீது அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கில் கைது செய்யப்பட்ட  லதா,  ஜாமீன் பெற்று வெளியே இருந்து வந்தார். இந்த வழக்கில் முன்தினம்  நடந்த விசாரணையில், லதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ‘மேல் முறையீடு செய்ய முடியாது,’ என்ற உத்தரவுடன், லதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிடடார்.

Related Stories: