மாநிலங்களில் கடுமையாக தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் 44 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை வாங்க ஒன்றிய அரசு ஆர்டர்

டெல்லி: மாநிலங்களுக்கு வழங்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவங்களிடம் இருந்து 44 கோடி டோஸ் மருந்து வாங்க ஒன்றிய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. சீரம் நிறுவனத்திடம் இருந்து 25 கோடி டோஸ் தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்கிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்து 30 கோடி டோஸ் வாங்க ஒன்றிய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது என டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக்கின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து 30 ஓடி டோஸ் தடுப்பூசி வாங்க ஒன்றிய அரசு ரூ.1,500 கோடி செலுத்தி உள்ளது. 3 நிறுவனங்களிடம் இருந்துக் கொள்முதல் செய்யப்படும் 74 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்  தடுப்பூசிகளை  தற்போது தொடங்கி டிசம்பர் இறுதி வரை இரு நிறுவனங்களும் சப்ளை செய்யும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

தடுப்பூசிகளுக்கான 30 சதவிகித தொகையை ஒன்றிய அரச ஏற்கனவே வழங்கிவிட்டதாக வி.கே.பால் தகவல் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது தமிழகத்தில் 90 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க கூடிய சூழலில் கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் கடுமையான தடடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் இன்று தடுப்பூசி தட்டுப்பாட்டால் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மற்ற மாநிலங்களிலும் இதே நிலை நீடிப்பதால் ஒன்றிய அரசு 44 கோடி தடுப்பூசிகளை வாங்க ஆர்டர் கொடுத்த்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தனது கொள்கையை மாற்றி கொண்டுள்ளது. 

Related Stories: