நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 94.3% ஆக உயர்வு: லாவ் அகர்வால் பேட்டி

டெல்லி: நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 94.3% ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தினசரி பாதிப்புகள் கடந்த 68 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துவிட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 87,345 பேருக்கு புதியதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், 2,115 பேர் தொற்றுபாதிப்பால் புதியதாக இறந்துள்ளனர். மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,89,96,949 ஆகவும், மொத்த இறப்புகள் எண்ணிக்கை 3,51,344 ஆகவும் உள்ளன.

கொரோனா இரண்டாவது அலையில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கொரோனா பாதிப்பு மே 7-ம் தேதி உச்சம் தொட்ட நிலையில் தற்போது பாதிப்பு 79% குறைந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் 6.3 அளவுக்கு குறைந்துள்ளது.நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் கடந்த 3 வாரங்களில் 33% குறைந்துள்ளது.

தற்போது 65% பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 94.3 சதவீதமாக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: