ஜெட் வேகத்தில் இயங்கும் அரசு: பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் பாராட்டு

சென்னை: தமிழக அரசு ஜெட் வேகத்தில் இயங்குவதாக பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார். இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் ஜெயரஞ்சன் கூறியிருப்பதாவது:

 காலை 6மணிக்கு தொலைபேசி அழைப்பு... நாங்கள் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம்..

முதல்வர் உங்களிடம் பேச வேண்டுமாம்...

 எனக்கு ஆச்சரியமாக இருந்தது... நேற்று தான் பதவி கொடுத்ததாக தகவல் வந்தது இன்றே அதுவும் காலை 6மணிக்கேவா என பேச தயாராக ஆனேன்...

 நான் மு. க. ஸ்டாலின் பேசுகிறேன்...

7 மணிக்கு நேரில் வரவும்...

வரும்போது தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் மக்களை பாதிக்காத வகையில் எந்தெந்த திட்டங்கள் துரிதமாக செயல்படுத்த முடியும் என்ற தங்களின் அறிக்கை எனக்கு வேண்டும்... நேரமின்மை காரணமாக என்னை நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கூட்டி தங்களின் கருத்துக்களை நம்ம சுப்ரமணிக்கு (சுகாதாரத்துறை அமைச்சர்), தியாகராஜனுக்கு (நிதியமைச்சர்) தகவல் கொடுத்துவிட்டு தங்கள் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்... வாழ்த்துக்கள் நன்றி.

அவ்வளவு தான் பேசினார்...

என்னுடன் பேசியது கூட எங்கோ நடந்து கொண்டு... இல்லை காரில் பயணித்த நிலையில் என நினைக்கிறேன்... அப்பறம் என்ன கிளம்பி போனா அங்கு அவர் இல்லை...

 11 மணிக்கு சக அதிகாரிகள் உடன் நடந்த கலந்துரையாடல் முடிந்து  மா.சு.க்கு போன் பண்ணுகிறேன்.. மனுஷன் 6 மணிக்கே மருத்துவமனையில் ஆய்வு செய்துகொண்டு உள்ளார்....

இந்த வயதில் என்னை இப்படி ஓடவைக்கிறார் முதல்வர்....

முதல்வரின் தலைமையில் பணியாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: