அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டு முடக்கம்: விதிமுறை மீறியதால் அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்த தோல்வியை ஏற்காத டிரம்ப், தனது ஆதரவார்களை தூண்டும் வகையில் பேசினார்.  இதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள்  நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்  உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள், விதிமுறையை மீறி செயல்பட்டதாக முடக்கப்பட்டன. இந்நிலையில், டிரம்ப்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு  முடக்கப்படுவதாக பேஸ்புக் நேற்று அறிவித்தது. இந்த தடை, கடந்த கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் கணக்கில் கொள்ளப்படுகிறது. இது பற்றி டிரம்ப் கூறுகையில், ‘‘இது, எனக்கு வாக்களித்த 7.5 கோடி மக்களுக்கு கிடைத்த அவமரியாதை,’’ என்றார்.

Related Stories: