ஆராயப் போகிறது நாசா வானில் எவ்வளவு நட்சத்திரம் உள்ளது? சைபர்-2 இன்று புறப்படுகிறது

வாஷிங்டன்: விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் பல மடங்கு முன்னேறி இருந்தாலும், நட்சத்திரங்கள் விஷயத்தில் நமக்கு புலப்படாத பல மர்மங்கள் மறைந்துள்ளன. அதில் ஒன்று, வானில் உள்ள நட்சத்திரங்களின் சரியான எண்ணிக்கை. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் நாசா உட்பட எந்த உலக நாடுகளும் வானில் உள்ள நட்சத்திரங்களின் சரியான எண்ணிக்கையை கண்டுபிடிக்கவில்லை. இந்த முயற்சியில் நாசா தற்போது களமிறங்க உள்ளது. இதற்கான செயற்கைக்கோளுடன் நியூமெக்சிகோவில் இருந்து சைபர்-2 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவுகிறது. தற்போது ஒவ்வொரு விண்மீன் மண்டலத்திலும் 10 கோடி நட்சத்திரங்கள் இருப்பதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. வானில் சுமார் 200 கோடி விண்மீன் மண்டலங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் பல ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம். இவற்றின் எண்ணிக்கையை துல்லியாக அறியும் தொழில்நுட்பத்துடன் இன்று சைபர்-2 விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

Related Stories: