இனி ஓட்டுநர் இல்லாமலேயே பயணிக்கலாம்!: நெதர்லாந்தில் அறிமுகமாக இருக்கும் தானியங்கி படகுகள்..!!

ஆம்ஸ்டர்டாம்: சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்தும் விதமாக தானியங்கி படகுகளை வடிவமைக்கும் பணிகளில் நெதர்லாந்து பொறியாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். மக்கள் தொகை பெருக பெருக நெதர்லாந்த் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், மாற்று போக்குவரத்து வழிமுறைகளை அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருகிறது. பயணிகள் வாகனங்களை குறைத்து நீர்வழி போக்குவரத்தை அதிகரிக்க தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவும் பேட்டரியால் இயங்கும் ஓட்டுநர் இல்லாத படகுகளை அந்நாட்டு பொறியாளர்கள் வடிவமைத்து வருகின்றனர். 

நீர்வழி போக்குவரத்து  வழித்தடங்களில் சென்சார்கள் அமைத்து அதனை படகில் உள்ள கணினி அடிப்படையில் இயங்கும் எந்திரத்துடன் இணைத்துள்ளனர். இதனால் ஓட்டுநர் இல்லாமலேயே ஜி.பி.எஸ். உதவியுடன் படகினை வெற்றிகரமாக இயக்குவதில் நெதர்லாந்து வல்லுநர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது சோதனை அடிப்படையில் ஓட்டுநர் இன்றி செயல்படும் படகுகளை நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இந்த முயற்சி வெற்றியின் விளிம்பில் உள்ள நிலையில் நாடு முழுவதும் ஓட்டுநர் இல்லாத படகு போக்குவரத்து சேவையை தொடங்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளது. தேவைப்படும் நாடுகளுடன் இத்தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ளவும் நெதர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தானியங்கி படகை வடிவமைத்த ரென்ஸ் தெரிவித்ததாவது, நீர் வழிபாதைக்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களில் இருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையில் இந்த தானியங்கி படகு இயங்குகிறது. பெறப்படும் அனைத்து தகவல்களும் படகின் மையத்தில் உள்ள கணியில் பதிவாகும் அடிப்படையில் இது மனித மூளையின் செயல்பாடு போன்றது தான் என்று குறிப்பிட்டார். 

Related Stories: