கொரோனா பேரழிவுக்கு பொறுப்பேற்று சீனா ரூ.700 லட்சம் கோடி இழப்பீடு தரவேண்டும் - டொனால்ட் ட்ரம்ப்

கலிஃபோர்னியா: உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹுபே மாநிலத்தில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியான நுண்ணுயிரி என்பது ஏறக்குறைய உறுதியாகி இருப்பதால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சீனா 700 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய செய்திகளின் படி வூஹான் நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியதற்கான ஆதாரம் வலுவடைந்து வருகிறது.

இதையடுத்து கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களில் கண்டுபிடிக்குமாறு அமெரிக்க உளவுத்துறைக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியான நுண்ணுயிரி தான் என்ற தனது குற்றச்சாட்டு தற்போது நிரூபிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தலைமை ஆலோசகர் டாக்டர் பவுசி மற்றும் சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றத்தின் கிடைத்துள்ள உறுதியான தகவல்களை யாரும் மறுக்க முடியாது என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் மூலம் உலக நாடுகளுக்கு ஏற்படுத்திய பேரழிவிற்கு பொறுப்பேற்று அமெரிக்கா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சீனா 10 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 700 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: