முக்கிய செய்தி உலகம் சீன ராணுவத்தோடு தொடர்புடைய 59 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய தடை!: அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவு..!! Jun 04, 2021 அமெரிக்கர்கள் ஜனாதிபதி ஜோ வாஷிங்டன்: சீன ராணுவத்தோடு தொடர்புடைய 59 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதித்து ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் உச்சம் தொட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 48 சீன நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய தடை விதித்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். அந்த நிறுவனங்கள் சீன ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. உள்நாட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கூறியிருந்தது. அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான சீன நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தைகளில் இருந்து வெளியேற்றப்பட்டன. இந்நிலையில், டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை 59 சீன நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தி ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி சீனாவின் ஏரோ எஞ்சின் கார்ப்பரேசன், ஏரோசன் கார்ப்பரேசன், ஃபுஜியான், ஹவாய் உள்ளிட்ட நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வெள்ளை மளிகை அறிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்த போது கொரோனாவை சீன வைரஸ் என்றும் சீனாவே திட்டமிட்டு உருவாக்கிய வைரஸ் என்றும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டினார். தற்போது ஜோ பைடனும் கொரோனா வைரஸின் மூலத்தை கண்டறிய அமெரிக்க உளவுப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். சீனா உடனான உறவில் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகளையே ஜோ பைடனும் பின்பற்றுவதால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜோ பைடன் அரசின் முடிவானது சர்வதேச பொருளாதார விதிமுறைகளை மீறும் செயல் என்று சீனா வருத்தம் தெரிவித்துள்ளது.
கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு 6 மாதம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு கருத்து
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம்
மீண்டும் குறைந்த தங்கம் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை
தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்