பிளஸ்-2 தேர்வு நடைபெறுமா? முதல்வர் நாளை அறிவிப்பார்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி:  திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து 2 நாளில் தெரிவிக்கப்படும். இ-மெயில் முகவரியில் கருத்துகளை தெரிவிக்கலாம். இதையெல்லாம் ஆலோசித்து சென்னையில் நாளை (இன்று) மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சிஇஓ), மாவட்ட கல்வி அலுவலர்கள் (டிஇஓ) கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

அதனைத்தொடர்ந்து ஆசிரியர், மாணவர் சங்கங்களின் பெற்றோர் கூட்டமும் காணொளி மூலம் நடைபெறும். அந்த கருத்துக்கள் முதல்வரிடம் தெரிவிக்கப்படும். அதன்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை 5ம்தேதி அறிவிப்பார். பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளார். மாணவர்கள் எதிர்காலம் முக்கியம் என்பதுபோல, உடல் நலமும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: