ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் நிரப்ப புதிய பாட்டிலிங் பிளாண்ட்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 28.52 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 3.76 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும், 5.56 மெட்ரிக் டன் நாமக்கல் ஸ்ரீலெட்சுமி ஆக்ஸிஜன் பிளாண்ட் நிறுவனத்திற்கும், 8.48 மெட்ரிக் டன் நெல்லை அரசு மருத்துவமனைக்கும், 10.72 மெட்ரிக் டன் மதுரை ஸ்ரீராம் மெடிக்கல் கேஸ் பைப் லைனர்ஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 429 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்தியின்போது வீணாகும் வாயு வடிவிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைக்க வசதியாக தற்போது அந்நிறுவனம் சார்பில் ரூ.11 கோடி மதிப்பில் பாட்டிலிங் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 400 சிலிண்டர்களில் ஆக்சிஜன் அடைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுப்ப முடியும். இதற்கிடையே ஆலையின் 2வது யூனிட்டில் இன்று அல்லது நாளை ஆக்சிஜன் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: