உத்தரகாண்டில் அதிர்ச்சி 2 டோஸ் தடுப்பூசி போட்ட 2204 போலீசாருக்கு தொற்று

டேராடூன்: உத்தரகாண்டில் 2382 போலீசாருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 93 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். உத்தரகாண்டிலும் கொரோனா 2வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஊரடங்கு போன்ற பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், அவர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்தாண்டு கொரோனா முதல் அலையில் 1,982 போலீசாருக்கு தொற்று ஏற்பட்டது. 8 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் இருந்து இதுவரை மொத்தம் 4,364 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மொத்தம் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட போலீசாரில் 2204 பேர் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். கடந்த ஏப்ரல், மே மாதத்தில் பணியில் இருந்தவர்களில் 2,382 போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2200 பேர் குணமடைந்து உள்ளனர். 5 பேர் உயிர் இழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் தடுப்பூசி போடாதவர்கள். மற்ற 2 பேர் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

Related Stories: