மேட்டூர் அணை 12ம் தேதி திறப்பு? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிடுகிறார். மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு நீர் திறப்பது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக மேட்டூர் ஆணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி நீர் திறந்து விடப்படுவதில்லை. இதனால், குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வசதியாக காவிரி ஆறு, கால்வாய், வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.  தூர்வாரும் பணிகளை ஜூன் 12ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறுவை சாகுபடி செய்ய வசதியாக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதி நீர் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிடுகிறார். தற்போது 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 97.33 அடியாக உள்ளது. அதாவது 61.43 டிஎம்சியாக உள்ளது. 100 அடி இருந்தாலே தண்ணீர் திறக்கலாம் என்பதால், ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

300 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை

தென்சென்னையில் 300 கோடியில் ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துமனை அமையவள்ளது. அதே போன்று மதுரையில் 60 கோடியில் உலக தரம் வாய்ந்த நூலகம், திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் 16 ஆயிரம் டன் நெல் சேமிப்பு கிடங்குகள் 24.3 கோடி செலவில் அமைக்கப்படுவது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாகிறது. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு 10 பேருக்கு அரசு பயனும், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நிவாரண உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

Related Stories: