ஒரே மாதத்தில் 17வது முறையாக அதிகரிப்பு மும்பை, டெல்லி, ராஜஸ்தானில் பெட்ரோல் விலை புதிய உச்சம்: அதிகபட்சமாக ₹105க்கு விற்பனை

புதுடெல்லி: ஒரே மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 17வது முறையாக உயர்ந்து மும்பை, டெல்லி, ராஜஸ்தானில் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதிகபட்சமாக ராஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.105க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினத்தோறும், மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தபோது, மத்திய அரசு கலால் வரியை உயர்ந்தி பொதுமக்களுக்கு பலன் எதுவும் கிடைக்காமல் செய்தது.

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் காரணமக பெட்ரோல், டீசல் விலையில் ஒரு மாதம் காலம் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. தேர்தல் முடிந்ததும், பெட்ரொல் மற்றும் டீசல் விலையும் தினமும் உயர தொடங்கியது. அதன்படி, தொடர் விலை ஏற்றம் காரணமாக ராஜாஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் பெட்ரோல் விலை ₹100ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 17 முறை உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 28 பைசாவும், டீசலுக்கு 23 பைசாவும் உயர்ந்தது.

இதனால், டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.49க்கும், டீசல் ரூ.85.38க்கும் விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.105.52, டீசல் ரூ.98.32க்கு விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் பெட்ரோல் ரூ.100.72, டீசல் ரூ.92.69, சென்னையில் பெட்ரோல் ரூ.95.76, டீசல் ரூ.89.90, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.94.50, டீசல் ரூ.88.23 முறையே விற்பனையானது. இந்த 17 நாளில் பெட்ரோல் ரூ.4.09, டீசல் ரூ.4.65 உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டு 36% உயர்ந்து பீப்பாய் 70 டாலருக்கும் அதிகமானதால் சில்லறை எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: