வைர வியாபாரி சோக்சி கடத்தலில் தொடர்பா?...ஆன்டிகுவா பிரதமர் மறுப்பு

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆன்டிகுவா பர்புடாவில் தங்கி இருந்தார். அங்கிருந்து அவர் திடீரென காணாமல் போனார். கடந்த செவ்வாய்  இரவு டொமினிகாவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக, அந்நாட்டு போலீசாரால் அவர் கைது  செய்யப்பட்டார். மெகுல் சோக்சி கடத்தப்பட்டதாகவும், இதில் ஆன்டிகுவா பிரதமருக்கு தொடர்பு இருப்பதாகவும்  புகார்கள் எழுந்துள்ளன.

இதை ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் கூறுகையில், “மெகுல் சோக்சியின் குடியுரிமையில் குழப்பங்கள் நிலவிய போதிலும், அவரது சட்டம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவர் ஆன்டிகுவா பார்புடா மண்ணில் இருந்தபோது அவரது உரிமைகளை குறைப்பதற்காக நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெகுல் சோக்சியை அகற்ற வேண்டும் என நினைத்து இருந்தால், அவரை விமானத்தில் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைப்பது சிறந்த வழியாக இருந்து இருக்கும்,’’ என்றார்.

Related Stories: