கொரோனா பாதுகாப்பு மீறல் நீச்சல் குளத்தில் ஹன்சிகா ஆட்டம்

சென்னை: நடிகை ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானி, நடிகை முஸ்கான் நான்சி திருமணம், கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தான் உதய்பூர் தி ராயல் ரீட்ரீட் என்ற 7 நட்சத்திர ஓட்டலில் நடந்தது. கொரோனா 2வது அலை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் திருமணம் நடந்ததால், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகக்கவசம், தடுப்பூசி போன்ற மருத்துவ பாதுகாப்புகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணம் நடந்ததாக ஹன்சிகா தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் அண்ணனின் திருமண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹன்சிகாவும், அவரது உறவினர்களும் நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி குதித்து கும்மாளமிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளுவதும், தண்ணீரில் குதித்து முத்தமிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

யாரும் முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. கொரோனா லாக்டவுன் விதிமுறைகளின்படி அனைத்து நீச்சல் குளமும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஓட்டல் நிர்வாகம் நீச்சல் குளத்திற்குள் அவர்களை அனுமதித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹன்சிகா வெளியிட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: