முக்கிய செய்தி தமிழகம் கொரோனா நோய் தொற்று: அதிகம் பாதிப்புள்ள கோவை உள்பட 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை May 30, 2021 கொரோனா தொற்று அமைச்சர் இந்தியா கோ. கு. ஸ்டாலின் கோவை: கொரோனா கட்டுப்படுத்துவது குறித்து கோவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் தொடரும் நிலையில் ஆய்வு செய்ய உள்ளார். ஏற்கனவே மே 20ல் கோவை சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கோவை உள்பட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி ஆகியோர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் சித்திக், கோவை மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டு நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 2 மாஜி முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் எதிர்காலம் என்னாகும்?
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார்
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி