கன்னியாகுமரியில் கனமழையால் சேதம் முதல்வர் நிறைவாக நிதி கொடுப்பார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு முதல்வர் நிறைவாக நிதி கொடுப்பார் என்று வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று, ஒடிசா இடையே கரையை கடந்தது. இதன்காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 25, 26-ந் தேதி கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பின. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 46 அடியை எட்டியதால், அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது.

இதன்காரணமாக, தாமிரபரணி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் ெபருக்கெடுத்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருவட்டார், திருவரம்பு, குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளிலும், விளை நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்தன. . பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெகே.கே.எஸ்.எஸ்.ஆர். ருக்கால் திருப்பதிசாரம், தேரூர் பகுதிகளில் வீடுகள் மூழ்கின. அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

இந்தநிலையில், வெள்ள சேத பகுதிகளை ஆய்வு செய்வதற்காக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேற்று முன்தினம் குமரி மாவட்டம் வந்தார். திருப்பதிசாரம் உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் இரவில் நாகர்கோவிலில் தங்கினார். 2-வது நாளாக நேற்று ஆய்வை தொடங்கினார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், அரசு முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திரரெட்டி, கலெக்டர் அரவிந்த் ஆகியோர் உடன் சென்றனர்.

நாகர்கோவில் அருகே உள்ள வேம்பனூர் பகுதியில் சேதமடைந்த உளுந்து உள்ளிட்ட விளை நிலங்களையும், குளச்சல் அருகே வெள்ளிமலையில் வாழை தோட்டங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், குளச்சல் சிங்காரவேலர் காலனி முதல் சைமன்காலனி பாலம் வரை உள்ள பகுதிகளை பார்வையிடார். இதுதவிர, குறும்பனை, கோடிமுனை, வாணியக்குடி உள்ளிட்ட முகாம்களில் இருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  இறுதியாக, சேத மதிப்புகளை விரைந்து கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தகவல்தொழில்நுட்ப அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் எம்.எம்.ஏ.க்கள், எம்.பி., மற்றும் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினர். இதில், பலரும் சேத விவரங்களை தெரிவித்தனர். இதன்பின், அமைச்சர் ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. ஆகியோர் அதிகாரிகளுடன் 2 நாட்களில் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட்டு கலெக்டர் மூலம் அறிக்கையாக அரசுக்கு அனுப்பவேண்டும். அந்த அறிக்கையின்படி எந்தவித குறைவும் இன்றி நிறைவாக முதல்வர் நிதி கொடுப்பார்’’ என்று தெரிவித்தார்.

அணையில் இருந்து 531 கன அடி வெளியேற்றம்

கன்னியாகுமரியில், கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பின. இதில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 46 அடியை எட்டியதால், 13 ஆயிரம் கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் ெபருக்கெடுத்தது. நேற்று குறைந்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை அணைக்கு 3,164 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 531 கன அடி உபரி நீராக வெளியேற்றப்பட்டது. அணை நீர் மட்டம் 43.03 அடியாக இருந்தது.

Related Stories: