மும்பை ஜிம்மில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. டெஸ்ட் தொடரில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணியினர் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள ஜிம்மில் வீரர்கள் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டுள்ளது.

அதில், சுப்மான் கில், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ரிஷப் பன்ட், இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் தீவிர பயிற்சி செய்வது இடம் பெற்றுள்ளது. ரிஷப் பன்ட் டுவிட்டரில் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு, உலகம் சில நேரங்களில் தலைகீழாகத் தோன்றலாம், ஆனால் குறிக்கோள்கள் எப்போதும் நேரான பார்வையாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories: