குளித்தலை பகுதியில் வேளாண்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் தினமும் 6 டன் காய்கறி விற்பனை-அதிகாரி தகவல்

குளித்தலை : குளித்தலை பகுதியில் வேளாண்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் தினமும் 6 டன் காய்கறி விற்பனையாகிறது என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மே 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதில் பொதுமக்களுக்கு அன்றாடம் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான காய்கறிகள் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை சார்பில் அரசு நிர்ணயம் செய்யும் விலையில் காய்கறி விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்தது.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் சார்பாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் செயல்பட்டு வரும் இந்த குழு மூலமாக .குளித்தலை வட்டாரத்தில் கே பேட்டை வைகை நல்லூர் ராஜேந்திரன் வல்லக்குளம் இனுங்கூர் சூரியனுர் பொய்யாமணி ஆகிய கிராமப்பகுதிகளில் விவசாய உற்பத்தியாளர்கள் குழுக்களின் மூலம் நான்கு சக்கர வாகனம் ஏற்பாடு செய்து காய்கறி கொள்முதல் செய்யப்பட்டு கிராமங்கள் தோறும் தினசரி உழவர் சந்தை அரசு விலை நிர்ணயத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நாளொன்றுக்கு சுமார் 6 டன் அளவுள்ள காய்கறிகள் தினந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன இதனால் கிராமங்களிலும் குளித்தலை நகரத்தில் உள்ள பொதுமக்கள் முழு ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் வீட்டிற்கு சென்று குளித்தலை வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் சார்பாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது பொதுமக்களும் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம் அதனால் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்கி சென்று முழு ஒத்துழைப்பு தந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இது தொடர்பாக உதவி தேவைப்படும் விவசாயிகள் 7639808700 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: