கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 மருத்துவக்கல்லூரி முதல்வர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: கரூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 மருத்துவக்கல்லூரி முதல்வர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை முதண்மை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 மருத்துவக்கல்லூரிகளின் முதல்வர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி முதல்வராக செயல்பட்டு வந்த முத்துச்செல்வன் கரூர் மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி சிவகங்கை மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், சிவகங்கை மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி விருதுநகர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் 13 மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: