இந்தியா புதுச்சேரியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நாளை காலை பதவியேற்பு!: சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அறிவிப்பு..!! May 25, 2021 பாண்டிச்சேரி முனுசுவாமி புதுச்சேரி: புதுச்சேரியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை பதவியேற்க இருக்கிறார்கள். இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்கு நாளை காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் அரளி, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதுபோன்ற காரணங்களால், முடிவுகள் அறிவிக்கப்பட்டு 23 நாட்களாகியும் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், தற்காலிக சபாநாயகர், புதிய எம்.எல்.ஏ.,க்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பாலியல் வழக்கில் சிக்கியதால் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கு கர்நாடக போலீஸ் கடிதம்
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தகவல்
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
ஆபாச வீடியோ விவகாரம் : பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ்
தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
காந்தி நகரில் அமித் ஷா-வை எதிர்த்து களமிறங்கிய 16 பேர் விலகல்: குஜராத் குற்றப்பிரிவு போலீஸாரே மிரட்டல் விடுத்ததாக பகீர் தகவல்