இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தி தொடங்கியது': ஆண்டுக்கு 10 கோடி டோஸ் இலக்கு

புதுடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 கோடி டோஸ்  உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளே பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக ரஷ்யாவின்  ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இந்த தடுப்பூசி கடந்த 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இன்னும்  முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இதன் விநியோக உரிமையை பெற்றுள்ள ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 2  தவணையாக ஸ்புட்னிக் தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

இந்நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவை சேர்ந்த பனாசியா பயோடெக் நிறுவனம், ரஷ்யாவின் ஆர்டிஐஎப் உடன் இணைந்து  இந்தியாவில் உற்பத்தியை தொடங்கி உள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலம், பட்டியில் உள்ள பனேசியா பயோடெக் மையத்தில் முதல்  தொகுப்பு உற்பத்தி செய்யப்பட்டு தர ஆய்வுக்காக ரஷ்யாவின் கமாலியா மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் முழு  அளவிலான தயாரிப்பு கோடை காலத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தபடி, ஆண்டுக்கு 10  கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: