கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றவர் கைது

சென்னை:  வில்லிவாக்கம் பஸ் டிப்போ அருகே சிவில் சப்ளை சிஐடி ஆய்வாளர் தன்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது,  ஒருவர் ரெம்டெசிவிர்  விற்பது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது வில்லிவாக்கத்தை  சேர்ந்த செங்குட்டுவன் (35) என்பதும், அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருவதும் தெரிந்தது.  இவர் ரெம்டெசிவிர்  மருந்தை 3,000 ரூபாய்க்கு வாங்கி, ஒரு பாட்டில் ரூ.18 ஆயிரத்துக்கு விற்றது தெரிய வந்தது. இவரிடம் இருந்து 30  பாட்டில் ரெம்டெசிவிர் மருந்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Related Stories: