விருதுநகரில் பூட்டிய கோயில் வாசலில் எளிய முறையில் திருமணங்கள்

விருதுநகர் : கொரோனா தொற்று முதல் பரவல் அலை துவங்கிய 2020ம் ஆண்டு மார்ச் முதல் அனைத்து சுப, துக்க நிகழ்ச்சிகளும் முழுமையற்ற வகையில் நடந்து வருகிறது. கொரோனா 2வது தொற்று பரவல் தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தளர்வுகளுடன் இருந்த ஊரடங்கு இன்று(மே 24) முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மே 10ம் தேதி முதல் கோயில், தேவாலயம், மசூதிகள் மூடப்பட்டுள்ளன.

தற்போதைய கொரோனா பரவலில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லாத நிலையில், வைகாசி மாதமான தற்போது முகூர்த்தங்கள் அதிகம் உள்ளது.  திருமண முகூர்த்த தினமான நேற்று பல திருமணங்கள் எளிய முறையில் உறவினர்கள் கூட்டமின்றி நடத்தப்பட்டன. பெரிய மண்டபங்களில் நடைபெற்ற திருமணங்களில் நேற்று தளர்வினால் மக்கள் கூட்டம், அதிகமிருந்தது.

விருதுநகர் வால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூகூர்த்த காலங்களில் தினசரி 10 முதல் 30 திருமணங்கள் வரை நடத்தப்படும். கோயில்கள் மூடி இருப்பதை தொடர்ந்து நேற்று அவற்றின் வாசலில் மணமக்களின் தாய், தந்தை உறவினர் என சுமார் 10 பேர் முன்னிலையில் உறவினர்கள் தாலி எடுத்து கொடுக்க மணமகன் தாலி கட்டுதல் நடைபெற்றது. வால சுப்பிரமணிய சுவாமி கோயில் வாசலில் நேற்று 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்

தன.

இன்று(மே 24) முகூர்த்தம் உள்ள நிலையில் முன்கூட்டி ஏற்பாடு செய்த திருமணங்களை எப்படி நடத்துவது என தெரியாமல் மணமக்கள் வீட்டினர் திகைத்து போய் உள்ளனர். முழு ஊரடங்களில் உறவினர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வளைகாப்பு மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளை பலர் ரத்து செய்து, எளிய முறையில் வீடுகளிலேயே நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Related Stories: