திரிணாமுல் எம்எல்ஏ ராஜினாமா பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிடுகிறார்?

கொல்கத்தா: நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி வெற்றி மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தபோதிலும், மம்தா போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். எனவே, அவர் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமானால், 6 மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், பவானிபூர் தொகுதி எம்எல்ஏவும், வேளாண் அமைச்சருமான கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேப் சட்டோபாத்யாய் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் பீமன் பானர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து பவானிபூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அங்கு மம்தா போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பவானிபூர் தொகுதியில் மம்தா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவரது சொந்த தொகுதி என்பதால் சோபன்தேப் பதவி விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு சிறையில் அடைக்க உத்தரவு இதற்கிடையே, நாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களையும் வீட்டு சிறையில் அடைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 4 பேரின் ஜாமீன் மனு மீது முடிவெடுப்பதில் நீதிபதிகளுக்குள் மாறுபட்ட கருத்துகள் ஏற்பட்டன. எனவே, வீட்டு காவலில் அடைக்க உத்தரவிட்டு, வேறு நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: