திருப்பதி ரேணிகுண்டா சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றம்-மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருப்பதி : திருப்பதி ரேணிகுண்டா சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.  

திருப்பதி ரேணிகுண்டா சாலையில்  மாநகராட்சி நகர திட்ட இணை அலுவலர் சீனிவாசலு தலைமையில் ஊழியர்கள் அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அதிரடியாக ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர். அப்போது நகர திட்ட இணை அலுவலர் சீனிவாசலு கூறியதாவது: திருப்பதி நகரில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் கட்டிடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.

அதன்பேரில் ரேணிகுண்டா சாலை ராமானுஜர் ஜங்சன் பகுதியில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பே சாலை விரிவாக்க பணிகளுக்காக நிலங்களை அரசு கையகப்படுத்தி இருந்தது. ஒரு சில இடங்களை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி அவர்களுடைய பத்திரங்களை ஆய்வு செய்ததில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ரேணுகுண்டா பகுதியில் அரசு இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: