கிருஷ்ணகிரி மத்தூர் அருகே பரபரப்பு: கொரோனாவால் இறந்ததாக பெண் உடலை புதைக்க எதிர்ப்பு: ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எரிக்கரையில் வைத்துவிட்டு சென்றனர்

போச்சம்பள்ளி: மத்தூர் அருகே  கொரோனாவால் இறந்ததாக கருதி, பெண்ணின் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எரிக்கரையில் வைத்துவிட்டு சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(50). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். இதையடுத்து, உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊரான கவுண்டனூர் கிராமத்திற்கு கொண்டு வந்து, அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இந்நிலையில், லட்சுமி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரது உடலை கிராமத்தில் அடக்கம் செய்யக்கூடாது என்றும், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், லட்சுமிக்கு கோரானா பாதிப்பில்லை என்ற சான்றிதழை காண்பித்தும்  அப்பகுதி மக்கள் ஏற்கவில்லை. இதனால், அதிர்ச்சிக்குள்ளான  ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பெனுகொண்டாபுரம்  ஏரிக்கரையில் அவரது உடலை இறக்கி வைத்து விட்டு சென்று விட்டனர். தகவலறிந்து மத்தூர் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். பின்னர், பொதுமக்களை சமரசப்படுத்தினர். இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரமாக கேட்பாரின்றி ஏரிக்கரையோரம் வைக்கப்பட்டிருந்த லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: