சூறைக்காற்றுடன் கனமழை: 3 ஆயிரம் ஏக்கர் தோப்பில் மாங்காய்கள் உதிர்ந்து நாசம்

போடி: தேனி மாவட்டம், போடி அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் மாந்தோப்புகள் உள்ளன. இப்பகுதியில் மல்கோவா, பனாரஸ், அல்போன்ஸா, பங்கனபள்ளி, மைசூர், செந்தூரம், காசா உள்ளிட்ட மா  ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு டவ் தே புயலால் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், மாந்தோப்புகளில் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் கொத்து, கொத்தாக உதிர்ந்து விட்டன. சுமார் 3  ஆயிரம் ஏக்கர் மாந்தோப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தோப்புகளில் உதிர்ந்த மாங்காய்களை டிராக்டர், லாரிகளில் விவசாயிகள் சேகரித்து  வருகின்றனர்.

Related Stories:

>