டவ்-தே புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: டவ்-தே புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொச்சி  அருகே அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் டவ்-தே புயலில் சிக்கி காணாமல் போயிருப்பது  அதிர்ச்சியளிக்கிறது. அவர்களை மீட்டு, காப்பாற்ற போர்க்கால வேகத்தில்  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்கள் எங்கு தவிக்கிறார்கள் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், கடலோரக் காவல் படையினரை உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்த  தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>