உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.83 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.25 கோடியாக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.31 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 16,31,65,572 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,25,76,903 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 83 ஆயிரத்து 230 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,72,05,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,953 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 3,36,95,916,  உயிரிழப்பு - 5,99,863, குணமடைந்தோர் -  2,70,98,620

இந்தியா   - பாதிப்பு - 2,46,83,065,  உயிரிழப்பு - 2,70,319,  குணமடைந்தோர் -  2,07,89,038

பிரேசில்  -  பாதிப்பு - 1,55,90,613,  உயிரிழப்பு - 4,34,852,  குணமடைந்தோர் -  1,40,62,396

பிரான்ஸ் -  பாதிப்பு -  58,63,839,  உயிரிழப்பு -  1,07,535, குணமடைந்தோர் -   50,80,344

துருக்கி  -  பாதிப்பு -  51,06,862,  உயிரிழப்பு -    44,537, குணமடைந்தோர் -   49,32,838

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா      - 49,31,691

இங்கிலாந்து - 44,48,851

இத்தாலி    - 41,53,374

ஸ்பெயின்   - 36,04,799

ஜெர்மனி    - 35,95,872

அர்ஜெண்டினா- 32,90,935

கொலம்பியா - 31,03,333

போலந்து    - 28,51,911

ஈரான்       - 27,39,875

மெக்சிக்கோ  - 23,80,690

Related Stories: