சென்னை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால்..! தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக ஆபாஷ்குமார், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக ஆர்.தினகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்வர் பொறுப்புக்கு வந்த பிறகு பல உயரதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். தலைமை செயலாளராக இறையன்பு நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவியில் ஏற்கனவே இருந்த ராஜீவ் ரஞ்சன் செய்தித்தாள் துறைக்கு மாற்றப்பட்டார்.

ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தமிழக காவல்துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரதீப் வி பிலிப் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் . ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த் முரளி, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி.யாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக தினகரன், ஆயுதப்படை ஐஜியாக லோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஐபிஎஸ் அதிகாரிகள் ஷகில் அக்தர், கந்தசாமி, ரவி, ஈஸ்வரமூர்த்தி, ஆசியம்மாள், அரவிந்தன், சரவணன் உள்ளிட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>