சொல்லிட்டாங்க...

முழு ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்றால் பெற்றோர், பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். - ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

எரிபொருள் விலைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்க அவற்றின் மீதான வரிகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

தமிழ் ஈழத் தாயகம் என்கின்ற வேட்கையை வீழ்த்தி, வல்லரசு நாடுகள் சேர்ந்து துடைத்து, அழித்த முள்ளிவாய்க்கால் நம் நெஞ்சங்களில் ஆறாத வடுவாக இருக்கிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ        

Related Stories:

>