டிக்டாக் வீடியோ சாகசம் 13 வயது சிறுவன் பலி

சூரத்: டிக்டாக் போன்ற சமூக வலைதளத்திற்காக கயிறை வைத்து சாகசம் செய்ய முயன்ற சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டதில் பரிதாபமாக பலியானான். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் டிக்டாக் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்துள்ளான். இதனால் பாடுவது, ஆடுவது, பல்வேறு சாகசங்கள் செய்வது என வீடியோக்களை பதிவேற்றம் செய்துகொண்டிருந்தான். நேற்று முன்தினம் மாலையில் அவனது பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். வீடு திரும்பியபோது கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு மயக்கமாகிக் கிடந்துள்ளான்.  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கயிறை வைத்து சாகசம் செய்த போது கழுத்தில் கயிறு சிக்கியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில், அவனது அதீத செல்போன் பயன்பாடு காரணமாக அவனது தாயார் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டானா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் குழந்தைகள் மீதான கண்காணிப்பை பெற்றோர் அதிகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன.

Related Stories:

>