முழு ஊரடங்கில் மது விற்றவர் கைது

சென்னை: விருகம்பாக்கம் ஆற்காடு சாலை நாராயணசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிகளவில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பந்தப்பட்ட வீட்டை போலீசார் நேற்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, விலை உயர்ந்த மதுக்கள் உட்பட 2,198 மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2,198 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>