திருச்சியில் கூடுதல் விலைக்கு விற்க வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிய அதிமுக மாஜி அமைச்சரின் தம்பி கைது: 500 குவாட்டர் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் கூடுதல் விலைக்கு விற்க வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிய அதிமுக முன்னாள் அமைச்சரின் தம்பி கைது செய்யப்பட்டார். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று (10ம்தேதி) முதல் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படுகிறது. மதுக்கடைகளும் மூடப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் நேற்றுமுன்தினம் முதல் மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். இதில் சிலர் கூடுதல் விலைக்கு விற்க, மதுபாட்டில்களை வாங்கி வீடுகளில்  பதுக்கி வைத்துள்ளனர்.இந்நிலையில் திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த மனோகரன் (40) என்பவர், ஊரடங்கு நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டில்களை வாங்கி வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக உறையூர்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்றுமுன்தினம் இரவு அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, வீட்டில் 500 குவார்ட்டர் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மனோகரனை கைது செய்தனர். கைதான மனோகரன், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் தம்பி ஆவார்.

Related Stories:

>